Tuesday, 9 October 2018

புது காதல் (puthu kaathal)





அயர்ந்து களைத்த நாளில் எல்லாம்
உன் அழகை கண்டு,
என்னை புதுப்பிக்கிறேன் ....

என்னை  தொட்டு தவழும்
உன் அலைக்கரங்களால் 
என்னை புதுப்பிக்கிறேன் .....

கண்ணம் சிலிர்த்து தொடும்
உன் ஈர மூச்சு காற்றில் , வாடிபோன
என்னை புதுப்பிக்கிறேன் ....

ஓங்கி விழும் அலைசிரிப்பில் 
மன சோர்வு தெறித்து
என்னை புதுப்பிக்கிறேன் .....

கடல் தான் நீ
கரையில் - உன் கரங்களில்
மணலில் - உன் மடியில்
அலையில் - உன் அருகில்
அத்தனையும் இங்கு நீ ....

பேச தூண்டவில்லை
மௌனமாய் --- உன்னுள் கரைகிறேன் ....
உன்னை காதலிக்கிறேன் .....